Thursday, 16 March 2017

காதுக்குள் இருக்கும் பருக்களால் அவஸ்தையா? அதை போக்கும் எளிய வழிகள்...

இந்த காலத்தில் முகப்பரு என்பது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சரும பிரச்சனைகளில் ஒன்று. பரு என்றாலே முகத்தில் தான் வரும் என்று எந்த ஒரு சட்டமும் இல்லை. பரு என்பது முகத்தைத் தவிர காதுகளுக்கு உள்ளேயும் வரும். காதுகளுக்கு உள்ளே ஏற்படும் பரு, முகத்தில் ஏற்படுவதை விட வேதனையை அதிகமாகவே தரக்கூடும்.

காதுகளில் பரு வந்தால் அதை எப்படி போக்குவது என்ற குழப்பம் இருக்கத் தான்செய்யும். இதை கவனிக்காமல் விட்டால் பருக்கள் பரவுவதற்கும் வாய்ப்பு உண்டு.

வாருங்கள், இப்போது நாம் காதுக்கு உள்ளே ஏற்படும் பருக்களைப் போக்குவதற்கான சில எளிய வழிகளைப் பற்றி பார்ப்போம்...


தண்ணீர் : 

தண்ணீரைக் கொண்டு காதுகளைக் கழுவுவதால் காதுகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளைப் போக்கி நோய் தொற்றுகளை அழித்துவிடும்.

ஆல்கஹால் இல்லாத சோப்பைக் கொண்டு கழுவினால் அது காதை முழுமையாக சுத்தம் செய்து பருக்களை ஒழித்துவிடும். நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை இதை செய்தால் காதுக்குள் பரு ஏற்படுவதை தடுத்துவிடலாம்.



ஹைட்ரஜன் பெராக்ஸைடு 

ஹைட்ரஜன் பெராக்ஸைடு காதிகளில் உள்ள பருக்களை அழிக்க உதவுகிறது. ஒரு பஞ்சு உருண்டையில் ஹைட்ரஜன் பெராக்ஸைடை தொட்டு காதில் உள்ள பருக்களின் மீது சிறிது நேரம் வைத்திருங்கள்.


பாக்டீரியாக்கள் மற்றும் அழற்சி உருவாக்கக்கூடிய கிருமிகளை அழித்து பருக்களை சீக்கிரம் ஆற வைத்து இருந்த தடம் தெரியாமல் மறையச் செய்துவிடும்.



ஆல்கஹால் 

ஆல்கஹாலை ஒரு சிறிய பஞ்சு உருண்டையில் தொட்டு பருக்களின் மீது வைக்க வேண்டும். இது பருக்களை சீக்கிரம் ஆற வைத்து மேற்கோண்டு பரு பரவாமல் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை இதை செய்யலாம்.


துளசி இலைகள் 

சிறிது துளசி இலைகள் எடுத்து நசுக்கி சாறு எடுத்து, அந்தச் சாற்றை பஞ்சில் தொட்டு காதில் உள்ள பருக்களின் மீது தடவுங்கள். சிறிது நேரம் அதை உலர விட வேண்டும்.

பின்னர், சுத்தமான தண்ணீரில் கழுவிட வேண்டும். இதனை நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை இதை ட்ரை செய்யதால் சுலபமாக போக்கி விடலாம்.


க்ரீன் டீ பைகள் 

க்ரீன் டீக்களில் உள்ள அதிகபடியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நோய் தொற்றுகளை நீக்கும் பண்புகள் பருக்களை விரைவில் நீக்க உதவுகிறது.



விட்ச் ஹாசல் ஆயில் சிறிது விட்ச் ஹாசல் ஆயிலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை பஞ்சில் தொட்டு காதில் உள்ள பருக்களில் தடவி சுத்தம் செய்ய வேண்டும்.

விட்ச் ஹாசல் ஆயிலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைரஸ் எதிர்ப்புகள் மற்றும் கிருமிநாசினிகள் அதிக அளவில் உள்ளது. எனவே, இதுவும் நல்ல பலன் தரும்.



முகப்பரு கிரீம் முகப்பரு கிரீமை உபயோகிப்பது மற்றொரு முக்கிய சிகிச்சை முறையாகும். முகப்பரு கிரீமில் 2% முதல் 10% வரை பென்சோயில் பெராக்சைடு உள்ளது. பென்சோயில் பெராக்சைடு பருக்களை விரைவாக ஆற வைத்து பரவாமல் தடுக்கி உதவுகிறது. நீங்கள் 10% க்ளைகோலிக் ஆசிட் கிரீமை கூட பருக்களைப் போக்க பயன்படுத்தலாம்.

ரோஜா நிறம் பெற வீட்டிலேயே ஒரு செய்முறை - உடனடி பலன் !!

சருமம் மென்மையாகவும், இளமையாகவும், மினுமினுப்பாகவும் இருப்பதை யாவருமே விரும்புவார்கள். எதுவும் தனிச்சையாகவே மாறாது. முறையான பராமரிப்பு கொடுத்தால் சருமம் போஷாக்கு பெற்று அழகுற ஜொலிக்கும்.

இளமையான சருமம் பெற நீங்கள் ரோஜாவை பயன்படுத்துவது முக்கியம். இது இளமையான சருமம் மட்டுமல்லாது ஜொலிஜொலிப்பையும் தரும். ரோஜாவைக் கொண்டு ஒரு செய்முறை உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.


தேவையானவை : 
ரோஜா இதழ் - 5 
பால் - 1 கப் 
கிளீசரின் - 2 ஸ்பூன் 
ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்


செய்முறை : 

ரோஜா இதழ்களை பிரித்தெடுத்து அவற்றை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.


செய்முறை : 
பின் அதனை பாலில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது பாலின் நிறம் மாறியிருக்கும். உள்ளிருக்கும் இதழ்களை நன்றாக மசித்தால் பாலின் நிறம் இன்னும் அடர்த்தியாகும்.



செய்முறை : 
இப்போது அதனுடன் 2 ஸ்பூன் கிளீசரின் மற்றும் 2 ஸ்பூன் வினிகர் கலக்குங்கள்.


செய்முறை : 

இதனை சில நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து அதன் பின் உபயோகிக்கவும். இதனை ஒரு பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவி காய்ந்ததும் தேய்த்து கழுவுங்கள்.


நன்மைகள் : 

இந்த கலவை சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்யும். தகுந்த ஈரப்பதம் அளித்து சுருக்கமில்லா சருமத்தை உண்டாக்கும். உபயோகப்படுத்திப் பாருங்கள். உடனடியான பலன் கிடைக்கும்.

சளியால் மூக்கு ஓரமா காயமாகி இருக்கா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

தற்போது காலநிலை மோசமாக உள்ளதால், பலருக்கும் சளி பிடித்து அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். சளி பிடித்தால், உடலில் உள்ள ஆற்றல் குறைவதோடு, மூக்கு ஒழுகுவதால் மூக்கின் ஓரங்களில் வறட்சியும், காயங்களும் ஏற்படும்.

ஆகவே சளி பிரச்சனையில் இருந்து விடுபடவும், அழகு பாழாகாமல் இருக்கவும் ஒருசில எளிய வழிகளைத் தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

கற்றாழை ஜெல் 

கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் நிறைந்த ஒரு மாய்ஸ்சுரைசர். இதனை மூக்கின் ஓரங்களில் தடவினால், சளியினால் ஏற்படும் வெடிப்புக்கள் மற்றும் வறட்சி நீங்கும்.


ஆலிவ் ஆயில் சளியினால் 

மூக்கின் ஓரங்களில் வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களை மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கலாம். அதற்கு கெமிக்கல் கலந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தாமல், ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துங்கள்.


சோப்புக்கள்/சுடுநீர் வேண்டாம் 

சளி பிடித்தால், பலரும் குடிக்கவும் சரி, முகத்தைக் கழுவவும் சரி சுடுநீரைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் மிகவும் சூடான நீருடன், சோப்புக்களைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள எண்ணெய் முழுமையாக நீக்கப்பட்டு, வறட்சி இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும். ஆகவே இந்த தவறைச் செய்யாதீர்கள்.


மூக்கை அதிகம் தேய்க்காதீர்கள் 

சளி பிடித்திருக்கும் போது, துணியால் கடுமையாக மூக்கைத் துடைக்கவோ, தேய்க்கவோ செய்யாதீர்கள். இதனால் அவ்விடத்தில் காயங்கள் தான் அதிகரிக்கும்.



யூகலிப்டஸ் ஆயில் 

வைட்டமின் ஈ எண்ணெயை யூகலிப்டஸ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, மூக்கின் மேல் தடவினால், மூக்கைச் சுற்றி ஏற்படும் வறட்சி தடுக்கப்படுவதோடு, யூகலிப்டஸ் எண்ணெய் சளியில் இருந்து விடுவிக்கவும் செய்யும்.