Wednesday, 28 December 2016

யார் யாருக்கு பாலுறவு வேட்கைக் குறைகிறது?

ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருக்குப் பாலுறவு வேட்கை குறையத்தான் செய்யும். ஒரு நபர் மன இறுக்கத்தில் இருந்தாலோ, நோய் வாய்ப்பட்டிருந்தாலோ அவரது பாலுறவுத் திறன் குன்றியிருக்கும்.



பாலுறவின் மூலம் திருப்தியடைந்த உடனே மறுமுறை செக்ஸ் வைத்துக்கொள்ளவும், கர்ப்ப காலத்தின்போதும் பெண்கள் தங்களுடைடைய பாலுறவு வேட்கையை இழக்கிறார்கள். சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் பாலுறவு வேட்கை அதிகரிப்பதுபோல, சிலருக்கு முற்றிலும் அந்த வேட்கை மறைந்துவிடும். 

சில மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவுகள்கூட பாலுறவு வேட்கையைக் குறைத்துவிடும். அதிக கவலை, அதிக மன இறுக்கம் போன்ற சூழல்களில் ஆசை மறைந்துவிடுகிறது.

வயது மற்றும் நாட்பட்ட நோய்கள் மற்றம் உடல் ரீதியான இயலாமை ஆகியவற்றாலும் பாலுறவு வேட்கைக் குறைந்து விடுகிறது.

பாலுறவில் நாட்டம்-ஆசை குறைந்தவர்கள், இன்னைக்கு வேண்டாம்பா ஒரே தலைவலியா இருக்கு.. என்பது போல கூறி தவிப்பார்கள்.

பாலுறவு வேட்கை குறைந்த ஆண்களில் சுமார் 45 விழுக்காட்டினர் தங்களுக்கு ஒற்றைத் தலைவலி இருப்பதாகக் கூறி பாலுறவு கொள்வதைத் தவிர்க்கின்றனர். இவ்வாறே பெண்களுக்கும் பாலுறவு வேட்கைக் குறைகிறது.

சர்க்கரை நேயாளிகளைப் பொறுத்தவரையில், நாட்பட்ட நிலையில் அதிக களைப்பு, மயக்கம், படபடப்பு போன்றவை தொடர்ந்துகொண்டிருப்பதால் அவர்களால் பாலுறவில் நாட்டம் செலுத்த முடிவதில்லை. பாலுறவின்போது தானாக சிறுநீர்க் கசிதல் இன்னொரு காரணம்.

இவை எல்லாவற்றுக்கும் மேல், இரத்த ஓட்டம் போதுமான அளவு இல்லாததாலும் அவர்களின் மூளை சரியாக இல்லாததாலும் அவர்களின் மூளை சரியாக இரசாயனக் கடத்திகளுக்குக் கட்டளையிடாது. தவிர, பாலுறுப்புகளும் விரைந்து செயல்படாது.

பற்களை இழக்காமல் இருக்க சில வழிமுறைகள்

இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. 




அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன. இதனால் எதை சாப்பிட்டாலும் பல் கூச்சம் ஏற்படுகிறது.

சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும். இதனால் வாய்துர்நாற்றம் ஏற்பாடாமல் இருக்கும்.

பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன. 

ஆண்டுக்கு இருமுறையாவது பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளுவதோடு, பற்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் பற்களுக்கும், உடலுக்கும் உடனடியான தீர்வு கிடைக்கும்.

பற்களை பாதுகாக்க சில வழிமுறைகள் :

1. அடிக்கடி டீ, காபி, குடிப்பதை குறைத்துக்கொள்வது நல்லது.

2. அளவுக்கதிகமான சூட்டையோ, குளிர்ச்சியையோ பற்களால் தாங்கிக் கொள்ளமுடியாது .

3. குளிர்ச்சியான உணவை உண்டவுடன், மிகவும் சூடாக எதையும் உட்கொள்ளக் கூடாது. 

4. இனிப்பை குறைத்துக்கொள்வது நல்லது. 

5. மிகவும் முக்கியமாக என்ன சாப்பிட்டாலும் வாயை தண்ணீர் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உணவு துணுக்குகள் வாயில் தாக்குவது தவிர்க்கப்பட்டு பற்கள் பாதுகாக்கப்படும்.

இயற்கையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய மருத்துவ அழகுக் குறிப்புகள்

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.




கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

Saturday, 24 December 2016

7 நாட்களில் முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...

என்ன தான் ஒருபக்கம் குளிர்காலமாக இருந்தாலும், மறுபக்கம் வெயில் கொளுத்திக் கொண்டு தான் உள்ளது. இதனால் சருமத்தின் நிறம் கருமையடைவதோடு, சரும செல்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, சருமம் சுருக்கமடைந்து, விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது.



சருமம் கருமையடையாமல் பொலிவோடு இருக்க, சூரியக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்திற்கு போதிய பாதுகாப்பை வழங்குவதோடு, சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும். அதில் தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர், சன்ஸ்க்ரீன் போன்றவற்றைப் 
பயன்படுத்துவதோடு, அவ்வப்போது ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்

இங்கு சருமத்தில் உள்ள கருமை மற்றும் சுருக்கங்களை ஏழு நாட்களில் போக்கும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.




ஸ்டெப் #1 

முதலில் 1/4 கப் சாதத்தை நன்கு மசித்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். சாதத்தில் லினோலியிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை உள்ளது. இது சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை மேம்படுத்தி, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.



ஸ்டெப் #2 

பின் மசித்து வைத்த சாதத்துடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கொள்ள வேண்டும். எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.




ஸ்டெப் #3 
பின்பு அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.


ஸ்டெப் #4 
பின் அதோடு 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 


ஸ்டெப் #5 

இறுதியில் அதோடு, சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.


ஸ்டெப் #6 

பிறகு சருமத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, சருமத்தை ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஸ்டெப் #7 

அடுத்து கலந்து வைத்துள்ள கலவையை, முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய வைக்க வேண்டும். மாஸ்க் நன்கு காய்ந்த பின், சிறிது நீரைத் தெளித்து, 10 நிமிடம் தேய்க்க வேண்டும்.

ஸ்டெப் #8 

பின்பு வெதுவெதுப்பான நீரால் சருமத்தைக் கழுவி, பின் குளிர்ந்த நீரால் சருமத்தைக் கழுவி, துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்



குறிப்பு 

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை போட்டு வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சரும சுருக்கங்கள் நீங்கும்.

Friday, 23 December 2016

அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புக்களைப் போக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!

அந்தரங்க பகுதி சுகாதாரம் என்பது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. பெண்களை விட ஆண்கள் தங்களது அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை என்று தான் கூற வேண்டும். இதனால் தான் ஆண்கள் எப்போதும் அந்தரங்க உறுப்பில் அரிப்பை அனுபவிக்கின்றனர்.


ஆனால் இப்படி அந்தரங்க உறுப்பில் அரிப்பு ஏற்படும் போது, அதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுத்து வராவிட்டால், பின் அவ்விடத்தில் காயம் ஏற்பட்டு, இரத்தக்கசிவை உண்டாக்கி, தொற்றுக்களை உண்டாக்கும். ஆரம்பத்திலேயே இயற்கை வழிகளின் மூலம் சிகிச்சை மேற்கொண்டால், விரைவில் அரிப்புக்களைப் போக்கலாம்.

சரி, இப்போது அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புக்களைப் போக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.


டீ-ட்ரீ ஆயில் 

இந்த எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது அரிப்புக்களைப் போக்குவதுடன், அவ்விடத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு சுத்தமான டீ-ட்ரீ ஆயிலை 3 துளிகள் எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் ஒரு பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி, அந்த எண்ணெயை அந்தரங்க பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், விரைவில் அரிப்புக்கள் அடங்கும்.



கற்றாழை 

கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூனில் எடுத்து, அதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் அந்தரங்க பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் தடவி மசாஜ் செய்து வர அரிப்புக்களை அடங்கிவிடும்.



தேன் 

தேனில் ஆன்டி-செப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. இது அரிப்புக்களைக் குறைப்பதோடு, வெட்டுக் காயங்களை விரைவில் குணமடையச் செய்து, வேகமாக சரிசெய்யும். அதற்கு தேனை அந்தரங்க பகுதியில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர, அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புக்கள் போய்விடும்.


பூண்டு

 பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. இது அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும். அதற்கு 5-6 பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு, 1/2 கப் ஆலிவ் ஆயிலில் போட்டு ப்ரை செய்ய வேண்டும். பூண்டின் நிறம் மாறிய பின், அதனை இறக்கி எண்ணெயை குளிர வைத்து, அந்த எண்ணெயை அரிப்புள்ள இடத்தில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அரிப்புக்கள் வேகமாக அடங்கும்.


வினிகர் ஒரு 

கப் வினிகரில் 4 கப் நீரை சேர்த்து கலந்து, அந்நீரால் அந்தரங்க உறுப்பை கழுவ வேண்டும். இப்படி தினமும் கழுவி வர, அந்தரங்க பகுதியில் அரிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.


ஆல்கஹால் 

ஆல்கஹாலை காட்டனில் நனைத்து, தினமும் சில முறை தடவி வர, அதில் உள்ள உட்பொருட்கள் விரைவில் அந்தரங்க பகுதியில் உள்ள தொற்றுக்களை நீக்கி, அரிப்பைப் போக்கும்.


மஞ்சள் பற்கள் மற்றும் ஈறு நோய்களைப் போக்க, தினமும் இத கொண்டு பல் துலக்குங்க..

தற்போது என்ன தான் பலவிதமான டூத் பேஸ்ட்டுகள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவற்றில் ஏராளமான தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் உள்ளன. இதனால் இவற்றைக் கொண்டு அன்றாடம் பற்களைத் துலக்கும் போது, அது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.


ஆனால் நம் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் மற்றும் ஈறு நோய்களைப் போக்க, நாம் வீட்டிலேயே டூத் பேஸ்ட்டை தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்த டூத் பேஸ்ட் தயாரிப்பதற்கு நம் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இதனால் அதிக பணம் செலவழிக்கத் தேவையில்லை.


சரி, இப்போது அந்த நேச்சுரல் டூத் பேஸ்ட்டை எப்படி செய்வதென்று காண்போம். அவற்றைப் படித்து அதை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தி நன்மைப் பெறுங்கள்.


தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்போன்றவற்றை அழிக்கும்.


வேப்பிலை பவுடர் 

வேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டது. வேப்பிலையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும். அக்காலத்தில் கூட பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சிகளைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீங்குவதோடு, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் புத்துணர்ச்சியுடனும் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

நாம் இப்போது தயாரிக்கப் போகும் டூத் பேஸ்ட்டிலும் வேப்பிலை தான் முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சரி, இப்போது அந்த பேஸ்ட்டை எப்படி தயாரிப்பது என்று காண்போ


தேவையான பொருட்கள்:

வேப்பிலை பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா - 3 டேபிள் ஸ்பூன்



தயாரிக்கும் முறை: 

முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அறைவெப்ப நிலையில் வைக்க வேண்டும்.



நன்மைகள் 

இந்த நேச்சுரல் டூத் பேஸ்ட்டில் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் ஏராளமாக உள்ளது. அதோடு இந்த பேஸ்ட்டில் ஃபுளூரைடு இல்லை. இந்த பேஸ்ட்டைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்கினால், பற்களை வெண்மையாவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.


குறிப்பு இந்த 

டூத் பேஸ்ட்டைக் கொண்டு தினமும் காலை மற்றும் இரவில் பற்களைத் துலக்கி வந்தால், வாயில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி, வாயின் ஆரோக்கியம் மேம்படும்.

சோப்புகளின்றி முகத்தை எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் எனத் தெரியுமா?

நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற குளிக்கும் போது நாம் பயன்படுத்துவது தான் சோப்பு. இந்த சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சோப்புகளை முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.

சோப்புகளைப் பயன்படுத்தாமல் எப்படி முகத்தை சுத்தம் செய்வதென்று நீங்கள் கேட்கலாம். ஆகவே தான் தமிழ் போல்ட் ஸ்கை சோப்புகளின்றி முகத்தை இயற்கை வழியில் எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் என கொடுத்துள்ளது. அதைக் கொஞ்சம் படித்து, அவற்றைப் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.


தேன் 

தேன் மிகவும் சிறப்பான மற்றும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும் ஓர் அற்புத பொருள். இது சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தாமல், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும். அதற்கு தேனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.


தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெய் மேக்கப்பை நீக்க மிகவும் சிறப்பான பொருள். ஆகவே இனிமேல் பணத்தை வீணாக மேக்கப் ரிமூவர் வாங்க செலவழிக்காமல், தேங்காய் எண்ணெயை


எலுமிச்சை 

எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமையைப் போக்க வல்லது. அதற்கு எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். 



தயிர் 

தயிர் ஓர் நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும். குறிப்பாக தயிரை வெயிலில் அதிகம் சுற்றுபவர்கள் பயன்படுத்தினால், வெயிலால் கருமையான சருமத்திற்கு, மீண்டும் நிறமூட்டலாம்.



ஆப்பிள் சீடர் வினிகர் 

1 கப் ஆப்பிள் சீடர் வினிகரில், 2 கப் நீர் சேர்த்து கலந்து, முகத்தைக் கழுவி வர, முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும். ஆனால் இச்செயலை வாரத்திற்கு ஒருமுறை தான் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சருமம் அதிக வறட்சியடையும்.


ஆலிவ் ஆயில் 

ஆலிவ் ஆயில் சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதோடு, மேக்கப்பை நீக்கவும் உதவும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலைக் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்.


Thursday, 8 December 2016

இந்த டூத் பேஸ்ட் ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் எனத் தெரியுமா?

வாய் ஆரோக்கியம் மோசமாக இருந்தால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆகவே ஒவ்வொருவரும் தங்களது வாய் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும்.

மேலும் ஆய்வுகள் பற்களில் உள்ள பற்காறைகள் இதய நோய்கள் வரும் அபாயத்தை அதிகரிப்பதாக கூறுகின்றன.

அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த டூத் பேஸ்ட்டால் தினமும் இருமுறை பற்களைத் துலக்கினால் மட்டும் வாயின் ஆரோக்கியம் அதிகரிக்காது.



சரி வேறு எந்த டூத் பேஸ்ட் தான் சிறந்தது? எதைக் கொண்டு பற்களைத் துலக்குவது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க வீட்டிலேயே ஓர் அற்புதமான டூத் பேஸ்ட்டை தயாரிக்கலாம். இது முழுமையாக இயற்கை பொருட்களைக் கொண்டு செய்யக்கூடியவை. சரி, இப்போது அந்த டூத் பேஸ்ட் குறித்து காண்போம்.



தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
புதினா எண்ணெய் - 1-2 துளிகள்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்


தேங்காய் எண்ணெய் : 

தேங்காய் எண்ணெயில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. ஆகவே இதனை டூத் பேஸ்ட் தயாரிப்பில் பயன்படுத்தும் போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.



மஞ்சள் தூள் 

மஞ்சள் தூளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது ஈறுகளில் உள்ள நோய்களை எளிதில் குணப்படுத்த உதவும்.



தயாரிக்கும் முறை: 

தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் மற்றும் புதினா எண்ணெய்களை ஒன்றாக கலந்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் எப்போதும் போன்று இதைக் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.



குறிப்பு 

இந்த பேஸ்ட்டைக் கொண்டு பற்களைத் துலக்கும் போது, நுரை ஏதும் வராது. அதற்காக இதைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டாம். மேலும் இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்திய பின், அது எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முகப்பருக்கள் நீங்க புகழ்பெற்ற ஷானாஸ் ஹுஸைனின் அழகுக் குறிப்புகள்!!

முகப்பருக்கள் கிருமிகளால் உருவாவதென்ராலும் சிலருக்கு இயற்கையிலேயே தீவிரமாக இருக்கும். அதனை தக்கபடி பராமரிக்காவிட்டால் சருமத்தை பாழ்படுத்தும் ஷானாஸின் புகழ்பெற்ற அழகுக் குறிப்புகள்

ஷானாஸ் ஹுஸைன் உலகப்ப்புகழ்பெற்ற அழகுக்கலை நிபுணர். இவருடைய அரேபிய அழகு குறிப்புகள் பிரசித்தமானவை. முக்கியமாக ரசாயனங்கள் இல்லாமல் இயற்கை முறையில் அழகு சாதனங்களை தயாரிப்பவர். அதனாலேயே அவரின் புகழ் உலகமெங்கும் பரவியது.


முகப்பருக்களின் வீரியத்தை பொறுத்தே நீங்கள் சிகிச்சையை மேர்கொள்ள வேண்டும். சருமத்தில் பெரிய துளைகளின் காரணமாக ஏக்னே என்று சொல்லப்படும் முகப்பருக்கள் வரும். என்ன செய்தாலும் பலன் தராமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் எந்த மாதிரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என்துதான் இங்கே அவர் சொல்லிருக்கும் குறிப்பு. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


முல்தானி மட்டி மற்றும் கடலை மாவு வேண்டாம் : 
கடலை மாவு மற்றும் முல்தானி மட்டி சரும துளைகளில் சென்று அடைத்துக் கொள்ளும். கழுவியும் போகாமல் இன்னும் முகப்பருக்களை அதிகப்படுத்திவிடும். ஆகவே அவற்றை தவிருங்கள்.




மஞ்சள் மற்றும் தயிர் :
இரண்டையும் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். தினமும் அதனைபூசி காய்ந்தபின் கழுவுங்கள். இதனால் கிருமிகள் அழியும். முகப்பருக்களின் தீவிரம் குறைந்து மறையும்.


சந்தனம் ரோஸ் வாட்டர் : 
சந்தனத்திற்கு காயத்தை ஆற்றும் தன்மை உள்ளது. சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து முகத்தில் த்டவி காய்ந்ததும் கழுவுங்கள்.


கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் : 
தீவிர முகப்பருக்கள் இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த தீர்வை தருகிறது. கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை சம அளவு எடுத்து முகப்பருகளின் மீது த்டவவும். கழுவவும். தினமும் செய்து பாருங்கள் .



வேப்பிலை :
வேப்பிலையில் ஆன்டி செப்டிக் குணம் உள்ளது. முகப்பருக்களுக்கு எதிராக செயல்படும். அதனை அரைத்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

Saturday, 13 August 2016

முகத்தை இளமையாக்கும் ஆளி விதை மாஸ்க் !!

அந்தந்த பருவத்தில் உண்டாகும் மாற்றங்களை எப்போதும் மாற்றமுடியாது. செயற்கையாக மறைத்தாலும் அது நீடிக்காது. தொடர்ந்து செயற்கைப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். 50 வயதினில் முதுமையில் உண்டாகும் சுருக்கங்களையும் நரைகளையும் ரசிக்கலாம். அது தனி அழகை தரும்.



ஆனால் முப்பதுகளிலேயே வரும் சுருக்கங்களையும் நரைகளையும் ஏளனத்துடன்தான் எல்லாரும் பார்ப்பார்கள். காரணம் உங்களது தவறான வாழ்க்கை முறைதான். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, மது, ரசாயனம் கலந்து அழகு சாதனங்கள், போதிய நீர் குடிக்காமலிருப்பது ஆகியவைகளை சொல்லலாம்.


இளமையில் முதுமையான தோற்றம் உண்மையில் வருத்தப்படத்தான் வைக்கும். மனம் சோர்ந்து போகாமல் இந்த குறிப்பை உபயோகிப்படுத்திப் பாருங்க. உங்களுக்கு மிகவும் பயனைத் தரும்.


தேவையானவை:
தேன் - 1 ஸ்பூன்
ஆளி விதை - 1 ஸ்பூன்
யோகார்ட் - 1 ஸ்பூன்.


ஆளி விதையை பொடி செய்து அதனுடன் தேன்,. யோகார்ட் கலந்து முகம் கழுத்து ஆகியவற்றில் தடவுங்கள். மேல் நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள்.

யோகார்ட் இறந்த செல்களை வெளியேற்றிவிடும். ஆளிவிதை சுருக்கங்களை போக்கி சரும இறுக்கத்தை தரும்.


அதேபோல் தேன் ஈரப்பதம் அளித்து, சுருக்கங்களை போக்கி, இளமையான மென்மையான சருமம் தரும். இந்த மூன்றின் கலவையில் சருமம் உயிர் பெறும். வாரம் மூன்று நாட்கள் செய்து பாருங்கள். நல்ல பலன்களை தரும்.